கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்: இதுவரை 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்: இதுவரை 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

image credit: @Udhaystalin

தினத்தந்தி 26 Oct 2023 10:27 AM GMT (Updated: 26 Oct 2023 11:53 AM GMT)

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்திற்காக இதுவரை 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், விண்ணப்பம் ஏற்கப்படாதவர்கள், மேல்முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கான காலம் நேற்று முன்தினத்துடன் முடிவுற்றது.

தமிழ்நாடு முழுவதுமிருந்து 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சார் ஆட்சியர் - துணை ஆட்சியர் - வருவாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலித்து வருகின்றனர்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் - சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் பணிகளை இன்று ஆய்வு செய்தோம். அப்போது மேல்முறையீடு செய்திருந்த மகளிரில் மூவரிடம் கைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது, அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை எடுத்துக் கூறிய போது, அதன் நியாயத்தை உணர்ந்து, நாம் கூறியதை ஏற்றுக் கொண்டனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விதிகளை பூர்த்தி செய்கிற ஒரு மகளிர் கூட, விடுபட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில் பணியாற்றிட அரசு அலுவலர்களை கேட்டுக் கொண்டோம்." இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story