கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல வலியுறுத்தி ம.தி.மு.க.வினர்ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல வலியுறுத்தி ம.தி.மு.க.வினர்ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Sep 2023 6:45 PM GMT (Updated: 25 Sep 2023 6:45 PM GMT)

கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல வலியுறுத்தி ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி

கோவில்பட்டி (மேற்கு):

வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டி நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி, கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நேற்று மாலையில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் துணை பொது செயலாளர் தி. மு. ராஜேந்திரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ் ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் சதன் திருமலை குமார், டாக்டர் ரகுராமன் மற்றும் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் துரை வைகோ ேபசுகையில், வந்தேபாரத் ரெயில்

அறிவிப்பு வந்த சில மணி நேரத்தில், கோவில்பட்டி நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் வைகோ கோரிக்கை கடிதம் கொடுத்ததுடன், கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். இந்த போராட்டத்தை அறிந்தவுடன் மத்திய இணை அமைச்சர் முருகன் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார். இது ம.தி.மு.க.வின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. அதே சமயம் அந்தரெயில் கோவில்பட்டியில் நின்று செல்லும் வரை ம.தி.மு.க. தொடர்ந்து போராடும், என்றார்.


Next Story