நாமக்கல் அருகே விதவை கூட்டு பலாத்காரம்; 3 வாலிபர்கள் அதிரடி கைது


நாமக்கல் அருகே  விதவை கூட்டு பலாத்காரம்;   3 வாலிபர்கள் அதிரடி கைது
x

நாமக்கல் அருகே விதவையை கூட்டு பலாத்காரம் செய்த 3 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் அருகே விதவையை கூட்டு பலாத்காரம் செய்த 3 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கூட்டு பலாத்காரம்

நாமக்கல்லை சேர்ந்தவர் 31 வயது விதவை பெண். இவருடைய கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்த நிலையில் இவர் திருச்செங்கோட்டை சேர்ந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஊழியர் ஒருவருடன் நண்பராக பழகி வந்தார். இருவரும் அவ்வப்போது வெளியில் சென்று வருவது வழக்கம் என்று தெரிகிறது. அதன்படி இருவரும் கடந்த 19-ந் தேதி மாலை நாமக்கல் அருகே உள்ள வீசாணம் ஏரி பகுதிக்கு சென்று பேசி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த 4 பேர் இவர்களை மிரட்டி 1¼ பவுன் நகை மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறித்தனர். மேலும் இருவரையும் 4 பேர் சேர்ந்து தாக்கியதோடு மோட்டார் சைக்கிளில் அமர வைத்து, அங்கிருந்து சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் பயனற்று கிடந்த கட்டிடத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அந்த கட்டிடத்தில் வைத்து இரவு 11 மணி வரை அந்த பெண்ணை கொடூரமான முறையில் கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

வீடியோ பதிவு

மேலும் அதை பெண்ணின் நண்பருடைய செல்போனில் 4 பேர் கும்பல் வீடியோ பதிவு செய்துள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பரை மிரட்டி 'கூகுள் பே' மூலம் பணத்தை வாங்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து வெளியே சொன்னால் இருவரையும் கொன்று விடுவோம் எனக் கூறிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நாமக்கல் அழகு நகரை சேர்ந்த நவீன்குமார் (வயது 21), வீசாணத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் தினேஷ்குமார் (21), பெயிண்டர் முரளி (26) மற்றும் வல்லரசு (24) ஆகியோர் விதவையை தாக்கி கூட்டு பலாத்காரம் செய்ததோடு நகை, பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது.

3 பேர் கைது

இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன்குமார், தினேஷ்குமார், முரளி ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நகை மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள வல்லரசை தேடி வருகின்றனர்.

இதில் நவீன்குமார் உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story