ஏப்ரல் 1-ந்தேதி உள்ளூர் விடுமுறை


ஏப்ரல் 1-ந்தேதி உள்ளூர் விடுமுறை
x

ஏப்ரல் 1-ந்தேதி உள்ளூர் விடுமுறை

திருவாரூர்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு அடுத்தமாதம் ஏப்ரல் மாதம் 1-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.

ஆழித்தேரோட்டம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் அடுத்த மாதம் ஏப்ரல் 1-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், திருவாரூர் தியாகராஜர் கோவில் தேரோட்டம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு போலீசாரை பொருத்தவரை தேர் கட்டுமானப்பணிகளுக்காக 5 தேர்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடு செய்து தருதல், தேரோட்டம் நடைபெறும் போது தேருக்கு முன்னும் பின்னும், வீதிகளிலும், கோவிலுக்குள்ளும், கமலாலயம் குளக்கரையிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்.

சாலை தகுதி சான்றிதழ்

தேரோடும் வீதிகளில் புதிதாக மின் கம்பம் நடும்போது தேரோட்டத்திற்கு இடையூறின்றி அமைக்க வேண்டும். தேரோட்டத்திற்கு சாலை தகுதி சான்றிதழ் வழங்க வேண்டும். வேளாண்மை பொறியியல் துறை தேர் விழாவிற்கு புல்டோசர்கள் வழங்க வேண்டும். மருத்துவத்துறையின் சார்பில் தேர்விழா நாளுக்கு மூன்று நாட்கள் முன்னும், மூன்று நாட்கள் பின்னும் திருவாரூர் மாவட்ட ஆஸ்பத்திரியில் பகல், இரவு முழுவதும் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிபுரிய ஏற்பாடு செய்து தர வேண்டும்.

ஆய்வு

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொதுமக்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு எளிதாக திரும்பிச் செல்லும் வகையில் சிறப்பு பஸ் வசதி செய்து தரவேண்டும். கோவில் ஆழித்தேரோட்டத்தை சிறப்பாக நடத்திட உரிய நடவடிக்கைகளை அனைத்துத்துறை அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

அதனை தொடர்ந்து திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட கீழவீதியில் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் சாருஸ்ரீ, பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் வருவாய் அலுவலர் சிதம்பரம், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி உள்ளிட்ட அரசுதுறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உள்ளூர் விடுமுறை

இதுகுறித்து கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, எம்.எல்.ஏ. ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தேரோட்டத்திற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. தேரோட்டத்துக்காக ஏப்ரல் 1-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. தேரோடும் 4 வீதிகளிலும் தற்காலிக கழிவறை வசதிகள் செய்து தரப்படுவதோடு தற்காலிக வாகன நிறுத்தும் இடங்கள் குறித்து அறிவிக்கப்படும். தேரோடும் வீதியில் 40 கண்காணிப்பு கேமராக்கள் தற்காலிகமாக பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டிரோன் வாயிலாகவும் கூட்டத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளுக்கு சீருடை மற்றும் சீருடை இல்லாமல் பணியாற்றவும், செயின் பறிப்பு, திருட்டு ஆகியவற்றை பிடிக்க தனிப்படை போலீசார் மற்றும் ஹோம்கார்டு நியமிக்கப்பட உள்ளனர். மேலும் அனுமதிக்கப்பட்ட டிரோன்கள் மட்டுமே பறக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story