17 சப்-இன்ஸ்பெக்டர்கள் விருதுநகர் மாவட்டத்தில் நியமனம்


17 சப்-இன்ஸ்பெக்டர்கள் விருதுநகர் மாவட்டத்தில் நியமனம்
x

பயிற்சி முடித்த 17 சப்-இன்ஸ்பெக்டர்கள் விருதுநகர் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் கூறினார்.

விருதுநகர்


பயிற்சி முடித்த 17 சப்-இன்ஸ்பெக்டர்கள் விருதுநகர் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் கூறினார்.

நியமனம்

தமிழக போலீஸ் தலைமையகத்தின் உத்தரவின் பேரில் கீழ்க்கண்ட பயிற்சி முடித்த 17 சப்-இன்ஸ்பெக்டர்கள் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு வருட காலத்திற்கு தாலுகா போலீஸ் நிலையங்களில் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் தெரிவித்துள்ளார். அவர்களின் பெயர் விவரம் வருமாறு:- அப்துல் காதர், அஜீஸ், அஜித்குமார், அங்காளேஸ்வரன், கெங்குராஜ், ஹரிராம், மாரியப்பன், முகமது அப்துல் அஜீஸ், முருகராஜ், பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோதி புவனேஸ்வரி, பிரியா, ரூபி அம்மாள், ஜமீலா பேகம், ரேவதி, செல்வி, உமா மாலினி.

அருப்புக்கோட்டை

விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றிய கீழ்க்கண்டவர்கள் வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அவர்களின் பெயர் விவரம் வருமாறு:-

ராஜபாளையம் வடக்கில் பணியாற்றிய நாஞ்சில் பிரித்திவிராஜ் சிவகங்கை மாவட்டத்திற்கும், அருப்புக்கோட்டையில் பணியாற்றிய திருப்பதி மதுரைக்கும், சிவகாசியில் பணியாற்றிய வேல்முருகன் தாம்பரம் நகர் பகுதிக்கும், திருத்தங்கல்லில் பணியாற்றிய வினோத் சிவகங்கை மாவட்டத்திற்கும், சிவகாசியில் பணியாற்றிய விஷ்ணுவர்தன் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

அதேபோல சூலக்கரையில் பணியாற்றிய பபிதா ஆவடிக்கும், திருத்தங்களில் பணியாற்றிய தனலட்சுமி மதுரைக்கும், காரியாபட்டியில் பணியாற்றிய திவ்யா மதுரைக்கும், ராஜபாளையத்தில் பணியாற்றிய துர்கா சென்னைக்கும், சாத்தூரில் பணியாற்றிய காளீஸ்வரி சிவகங்கைக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றிய பரமேஸ்வரி மதுரைக்கும், வெம்பக்கோட்டையில் பணியாற்றிய பிரணிதா ராமநாதபுரத்திற்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றிய சுவாதி மதுரைக்கும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story