4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 38 பேர் கொண்ட கண்காணிப்பு குழு நியமனம்

4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 38 பேர் கொண்ட கண்காணிப்பு குழு நியமனம்
x
தினத்தந்தி 5 March 2023 6:45 PM GMT (Updated: 5 March 2023 6:45 PM GMT)

நடைபெற உள்ள பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளை மாநிலம் முழுவதும் கண்காணிப்பதற்காக 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 38 அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காதர்லாஉஷா உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர்

பொதுத்தேர்வு

மாநில பாடத்திட்டத்தின் படியான பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முறையே இம்மாதம் 14-ம் தேதியும், 23-ம் தேதியும் தொடங்குகிறது. தேர்வுகளை தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் முறையாக கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் குழுவை நியமித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:- இக்குழுவில் பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட இயக்குனர் இளம் பகவத், பாடநூல்கழக வேளாண்மை இயக்குனர் கஜலட்சுமி, ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கட் பிரியா ஆகிய 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பள்ளி கல்வித்துறை இயக்குனர்கள் அறிவொளி, நாகராஜ முருகன், குப்புசாமி, லதா கண்ணப்பன், ராமேஸ்வர முருகன், பழனிச்சாமி, உமா, உஷாராணி ஆகியோரும், இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் உள்பட 38 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு

பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியதும் இந்த உயர் அதிகாரிகள் குழுவினர் மாநில முழுவதும் 38 மாவட்டங்களிலும் பொதுத்தேர்வுகள் எவ்வித குழப்பமும் இன்றி முறையாக நடைபெற தேவையான ஏற்பாடுகள் செய்தவுடன் கண்காணிப்பு நடவடிக்கையும் மேற்கொள்வார்கள் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Next Story