முதல்-அமைச்சர் விருது பெற விண்ணப்பிக்கலாம்


முதல்-அமைச்சர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
x

நாகை மாவட்டத்தை சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள் முதல்-அமைச்சர் விருது பெற விண்ணப்பிக்க அடு்த்த மாதம் 10-ந்தேதி கடைசி நாளாகும்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தை சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள் முதல்-அமைச்சர் விருது பெற விண்ணப்பிக்க அடு்த்த மாதம் 10-ந்தேதி கடைசி நாளாகும்.

முதல்-அமைச்சர் விருது

நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் தலா 2 வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுனர்கள், உடற்கல்வி இயக்குனர் அல்லது உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருது மற்றும் ரூ.1 லட்சத்திற்கான காசோலை, தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துனர், ஒரு நிர்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம், ஒரு நன்கொடையாளர் (ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்) ஒரு ஆட்ட நடுவர், ஆகியோர்களுக்கு விருது மற்றும் தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த விருதை பெற நாகை மாவட்டத்தை சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள் விண்ணபிக்கலாம்.

இந்தியாவுக்காக விளையாடி இருக்க வேண்டும்

கடந்த 1.4.2018-ம் தேதி முதல் 31.3.2021-ந் தேதி வரையிலான காலத்தில் மேற்குறிப்பிட்ட சாதனைகள் அல்லது நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் விருதுக்காக விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். இரண்டு முறை தமிழ்நாடு அணியின் சார்பில் கலந்துகொண்டு இந்தியாவுக்காக விளையாடி இருக்கவேண்டும்.

தமிழகத்தில் குறைந்தது 5 ஆண்டுகளாக வசித்து வரும் முப்படை, ெரயில்வே, காவல், அஞ்சல், தொலை தொடர்புத்துறை மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவார்கள். 2-வது முறையாக ஒரு நபருக்கு இந்த விருது வழங்கப்பட மாட்டாது. விருதிற்கு முந்தைய 3 ஆண்டுகளில் விளையாட்டில் பெற்ற சிறந்த வெற்றிகளை எடுத்துக்கொள்ளப்படும்.

விண்ணப்பங்கள்

விருதுக்கான விண்ணப்பங்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம பதிவிறக்க செய்து கொள்ளலாம். சாதனைக்கான அனைத்து சான்று ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை-600003 என்ற முகவரிக்கு அடுத்த மாதம்(ஜூன்) 10-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப உறையின் மேல் முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம் என்று குறிப்பிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story