வட்டி மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம்


வட்டி மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
x

கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு அபிவிருத்தி நிதி திட்டத்தின் கீழ் வட்டி மானியத்துடன் கடன் பெற, விவசாயிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை,

கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு அபிவிருத்தி நிதி திட்டத்தின் கீழ் வட்டி மானியத்துடன் கடன் பெற, விவசாயிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

பராமரிப்பு

சிவகங்கை மாவட்டகலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை மூலம் கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.15 ஆயிரம் கோடி நிதியுடன் ஆத்மா நிர்பார் பாரத் அபியான் என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டம் மூலம் தனிப்பட்ட தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆகியவை மூலம் பால் பதப்படுத்துதல், மதிப்பு கூட்டல் உள்கட்டமைப்பு, இறைச்சி பதப்படுத்துதல் மதிப்பு கூட்டல் உள்கட்டமைப்பு, கால்நடை தீவன உற்பத்தி ஆலைகள், தொழில்நுட்ப அடிப்படையிலான இனப்பெருக்க பண்ணைகள், கால்நடை மருத்துவ தடுப்பூசி மற்றும் மருந்து தயாரிப்பு அமைப்புகள், கால்நடை கழிவுகள் மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

பால்பொருட்கள்

இதில் பயன்பெற விரும்பும் தொழில் முனைவோர் பால் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டிய பால் பொருள்களை உற்பத்தி செய்தல் அல்லது தற்போது உள்ள அலகுகளை வலுப்படுத்துதல், இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டு இறைச்சி பொருள்களை உற்பத்தி செய்தல், தொழில் நுட்ப உத்திகளை கொண்டு கால்நடை இனங்களை மேம் படுத்துதல் மற்றும் இனப்பெருக்க பண்ணைகள் தொடங்குதல், கால்நடை மருத்துவ தடுப்பூசிகள் மற்றும் மருந்து உற்பத்தி அலகுகளை நிறுவுதல், கால்நடை வேளாண்மைக் கழிவுகளை கொண்டு கழிவுகள் மேலாண்மை மூலம் வளமை பெற்ற பயன்பாட்டு பொருள்களை உருவாக்குதல் போன்ற திட்டங்களில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

இதில் பயன்பெற விரும்புவோர் தனிப்பட்ட தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களாக இருப்பது அவசியம்.

தகவல்கள்

இத்திட்டத்தில் தொழில் முனைவோராகும் பயனாளிகளுக்கு மத்திய அரசு 3 சதவீத வட்டி மானியம் மற்றும் கடன் உத்திரவாதம் வழங்குகிறது. விருப்பம் உள்ளவர்கள் ahidf.udyamimitra.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், இது குறித்த தகவல்கள், வழிகாட்டுதல்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகிதெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story