பழங்கால நாணய கண்காட்சி
வந்தவாசியில் பழங்கால நாணய கண்காட்சி
திருவண்ணாமலை
வந்தவாசி
உலக அருங்காட்சியக தினத்தையொட்டி வந்தவாசியில் உள்ள அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் பழங்கால நாணய கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை கல்லூரி நிறுவனர் முனிரத்தினம் திறந்து வைத்தார்.
கல்லூரி முதல்வர் ருக்மணி, செயலர் ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கண்காட்சியில் அனைத்து நாட்டு நாணயங்கள், சேர, சோழ, பாண்டிய நாட்டு நாணயங்கள், பழங்கால தங்க மற்றும் வெள்ளி நாணயங்கள், அஞ்சல் வில்லைகள், பெரிய மற்றும் சிறிய ரூபாய் நோட்டுகள், ஓலைச்சுவடிகள், புராதன கால பொருட்கள் உள்ளிட்டவை வரிசைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த கண்காட்சியை கல்லூரி மாணவிகள், பேராசிரியைகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
புதுச்சேரி நாணய ஆய்வாளர் பதுர்காபவானி, கல்லூரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் சண்முகம் ஆகியோர் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Related Tags :
Next Story