தலமலை வனச்சாலையில் மர்ம விலங்கு கடித்து பசு மாடு காயம்


தலமலை வனச்சாலையில் மர்ம விலங்கு கடித்து பசு மாடு காயம்
x

தலமலை வனச்சாலையில் மர்ம விலங்கு கடித்து பசு மாடு காயம்

ஈரோடு

தாளவாடி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, தலமலை, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை கடித்து கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை தலமலை வனச்சரகத்துக்கு உள்பட்ட திம்பம் செல்லும் சாலையோரத்தில் பசு மாடு ஒன்று மர்ம விலங்கு கடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டனர். உடனே அந்த பசு மாட்டை சிலர் புகைப்படம் எடுத்தனர். மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதுபற்றி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காயம் அடைந்த பசு மாட்டின் உரிமையாளர் யார் என்ற தகவல் உடனடியாக வனத்துறையினருக்கு தெரியவில்லை.


Next Story