கொடுத்த கடனை கேட்டதால் ஆத்திரம்:ரெயில்வே ஊழியரை கூலிப்படையை ஏவி கொலை செய்வதாக மிரட்டல்- சென்னை தம்பதி மீது வழக்கு


கொடுத்த கடனை கேட்டதால் ஆத்திரம்:ரெயில்வே ஊழியரை கூலிப்படையை ஏவி கொலை செய்வதாக மிரட்டல்- சென்னை தம்பதி மீது வழக்கு
x

கொடுத்த கடனை கேட்டதால் ஆத்திரம் ரெயில்வே ஊழியரை கூலிப்படையை ஏவி கொலை செய்வதாக மிரட்டல் விடுத்த சென்னை தம்பதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை


கொடுத்த கடனை கேட்டதால் ஆத்திரம் ரெயில்வே ஊழியரை கூலிப்படையை ஏவி கொலை செய்வதாக மிரட்டல் விடுத்த சென்னை தம்பதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரெயில்வே ஊழியர்

மதுரை பைபாஸ் ரோடு எஸ்.பி.ஐ. ஆபிசர்ஸ் 2-வது காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 59). ரெயில்வேயில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு இவரிடம் சென்னை வேளச்சேரியை சேர்ந்த தொழில் அதிபர்கள் லட்சுமி நாராயணன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். அப்போது அவர்கள் தாங்கள் நடத்தி வரும் தனியார் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் தொழில் விரிவாக்கம் செய்ய இருப்பதாகவும், அதற்காக ரூ.30 லட்சம் கடன் தேவைப்படுவதாகவும் கூறினர். மேலும் அந்த தொகையை பெற்று கொடுத்தால் அதனை சரியாக கட்டி விடுவோம் என்று வாக்கு கொடுத்தனர். இதுதவிர ஒவ்வொரு மாதமும் ரூ.25 ஆயிரம் வட்டியாக பாலசுப்பிரமணியனுக்கு கொடுப்பதாக உறுதி அளித்தனர்.

மிரட்டல் விடுத்த தம்பதி

அதை நம்பி அவர் 27 லட்சம் ரூபாயை கடன் பெற்று அவரது வங்கி கணக்கு மூலம் லட்சுமிநாராயணனுக்கு கொடுத்துள்ளார். பணம் கொடுத்த பின்பு 2 மாதங்கள் அவருக்கு வட்டி தொகையை கொடுத்து வந்தனர். அதன்பின்பு அவர்கள் தெரிவித்தபடி பணத்தை கொடுக்கவில்லை. எனவே பாலசுப்பிரமணியன் கொடுத்த பணத்தை திரும்பி கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். தொடர்ந்து அவர் பணத்தை கேட்டு வந்ததால் ஆத்திரமடைந்த லட்சுமி நாராயணனும், அவரது மனைவியும் சேர்ந்து பணத்தை திருப்பி தரமுடியாது என்று கூறினர். மேலும் பணத்தை கேட்டு தொந்தரவு செய்தால் உன்னை கூலிப்படையை ஏவி கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதுகுறித்து பாலசுப்பிரமணியன் எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் சென்னையை சேர்ந்த தம்பதி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story