லஞ்சம் கேட்பதாக புகார்


லஞ்சம் கேட்பதாக புகார்
x
தினத்தந்தி 24 Feb 2023 9:46 PM GMT (Updated: 25 Feb 2023 6:53 AM GMT)

அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார் தெரிவித்தனர்.

அரியலூர்

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தபோது, விவசாயிகளிடம் கிராம நிர்வாக அலுவலர்கள் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். அப்போது குறுக்கிட்ட மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் தொடர்பான உரிய ஆதாரங்களை இணைத்து, மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவாக குற்றம் சாட்டக்கூடாது என்று தெரிவித்தார். அப்போது அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் லஞ்சம் கேட்பதாகவும், லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். மேலும் சுப்ரமணியன் என்ற விவசாயி இலவச மின் இணைப்பை தனது மகனின் பெயருக்கு மாற்றுவதற்காக கையெழுத்து வாங்க சென்றபோது, ஒரு கிராம நிர்வாக அலுவலர் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட வீடியோவை வெளியிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story