அகோபில வரதராஜ பெருமாள், சீதேவி-பூதேவி திருக்கல்யாணம்


அகோபில வரதராஜ பெருமாள், சீதேவி-பூதேவி திருக்கல்யாணம்
x

அகோபில வரதராஜ பெருமாள், சீதேவி-பூதேவி திருக்கல்யாணம் நாளை நடக்கிறது

பழனி அருகே பாலசமுத்திரத்தில் பிரசித்திபெற்ற அகோபில வரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இங்கு ஆண்டுதோறும் ஆவணி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை 7 மணிக்கு சப்பரத்தில் சுவாமி, சீதேவி-பூதேவியுடன் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதேபோல் இரவில் அனுமன், பவளக்கால், கருடன், சேஷம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தநிலையில் திருவிழாவின் 7-ம் நாளான நாளை (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு மேல் அகோபில வரதராஜ பெருமாள், சீதேவி-பூதேவி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு பவளக்கால் சப்பரத்தில் சீதேவி-பூதேவியுடன் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 12-ந்தேதி நடக்கிறது. அதையொட்டி காலை 6.30 மணிக்கு தேரேற்றம், 7.15 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.



Next Story