அதிமுக பொதுக்குழு கூட்டம் - பாதுகாப்பு கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு...!


அதிமுக பொதுக்குழு கூட்டம் - பாதுகாப்பு கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு...!
x

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த நிலையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் கடந்த 14-ம் தேதி ஆலோசனை நடைபெற்றது. அப்போது பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகள், தீர்மானங்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மனு தாக்கல் செய்து உள்ளார்.


Next Story