நீதித்துறை பணியாளர் எழுத்துத்தேர்வு முன்னேற்பாடு பணி குறித்து ஆலோசனை


நீதித்துறை பணியாளர் எழுத்துத்தேர்வு முன்னேற்பாடு பணி குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 30 Sep 2022 8:00 PM GMT (Updated: 30 Sep 2022 8:00 PM GMT)

நீதித்துறை பணியாளர் எழுத்துத்தேர்வு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி தலைமையில் நடந்தது.

சேலம்

நீதித்துறை பணியாளர் எழுத்து தேர்வு வருகிற 15, 16-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த தேர்வு மாவட்டத்தில் 20 தேர்வு மையங்களில் 18 ஆயிரத்து 627 பேர் எழுத உள்ளனர். இந்த எழுத்து தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி தலைமை தாங்கினார். கலெக்டர் கார்மேகம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நீதிபதி கலைமதி பேசுகையில், தேர்வு நடைபெறும் நாட்களில் மையங்களுக்கு சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதும் மையத்தில் தேவையான சக்கர நாற்காலிகள் மற்றும் நடமாடும் வாகனம் ஏற்பாடு செய்ய வேண்டும். தேர்வாளர்கள் குறித்த நேரத்திற்கு தேர்வறைக்கு வருகை புரிய வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ், நீதிபதி தீபா, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story