வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி குறித்த ஆலோசனை


வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி குறித்த ஆலோசனை
x

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி குறித்த ஆலோசனை நடந்தது.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரபுசங்கர் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை இன்று (நேற்று) முதல் தொடங்க இந்திய தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணியானது இன்று (நேற்று) முதல் தொடங்கி 31.3.2023-ம் ஆண்டுக்குள் முடித்திட திட்டமிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்குவதற்காகவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது ஒரு வாக்காளரின் விவரங்கள் இரு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிர்க்கும் விதமாக ஆதார் இணைக்கும் பணியானது உறுதுணையாக அமைகிறது. வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் பாதுகாக்கப்படும். எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தானாக முன்வந்து ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்து கரூர் மாவட்டத்தின் 4 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக்கும் பணிக்கு ஒத்துழைப்பு நல்குமாறும், 1.4.2023-ம் ஆண்டு அனைத்து வாக்காளர்களும் ஆதார் அட்டை எண்ணை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்து முன்னோடி மாவட்டமாக கரூர் மாவட்டம் திகழ்வதற்கு அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும், என்றார்.


Next Story