அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை மீண்டும் சட்டப்படி நடத்த முடியாது; வைத்திலிங்கம் பேட்டி


அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை மீண்டும் சட்டப்படி நடத்த முடியாது; வைத்திலிங்கம் பேட்டி
x

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை மீண்டும் சட்டப்படி நடத்த முடியாது என்று வைத்திலிங்கம் கூறினார்.

அரியலூர்

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் சென்னையில் இருந்து கார் மூலம் தஞ்சைக்கு சென்றார். அப்போது அவருக்கு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடியில் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறுகையில், கோர்ட்டு உத்தரவின்படி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் வேறு எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றக்கூடாது. நிறைவேற்றி இருந்தால் செல்லாது. அது கோர்ட்டு அவமதிப்பு செயலாகும். ஜூலை 11-ந்தேதி மீண்டும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை சட்டப்படி நடத்த முடியாது, என்றார்.

இதேபோல் அரியலூர் வழியாக வைத்திலிங்கம் சென்றபோது அரியலூர் புறவழிச்சாலையில் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், சி.வி.சண்முகம் கூறிய கருத்து சட்டத்திற்கு உட்பட்டது இல்லை. தேர்தல் ஆணையத்தையும், உச்சநீதிமன்றத்தையும் சந்திக்கும் சூழ்நிலை தற்போதைக்கு இல்லை. 3 நாட்களில் கட்சியை எப்படி வழிநடத்திச்செல்வது என்று ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும். கட்சி பிரச்சினைகளில் ஏற்கனவே நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் தலையிட்டுள்ளது. எனவே அவை தலையிட முடியாது என்று சொல்ல முடியாது, என்றார்.


Next Story