நாகையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


நாகையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2023 6:45 PM GMT (Updated: 6 Oct 2023 6:45 PM GMT)

தமிழக அரசை கண்டித்து நாகையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

தமிழக அரசை கண்டித்து நாகையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தண்ணீரின்றி கருகிய குறுவை நெற்பயிர்

குறுவை சாகுபடிக்கு போதிய அளவு நீரை பெற்றுத்தர முயற்சி செய்யாமலும், குறுவை சாகுபடியை காப்பீட்டு திட்டத்தில் சேர்க்காமலும் உள்ள தமிழக அரசை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட்டு ஆணையின்படி உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும், சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்து, தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க வலியுறுத்தியும், நாகை மாவட்ட அ.தி.மு.க சார்பில் அவுரித்திடலில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் தங்க.கதிரவன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. பேசுகையில், கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் குறுவை சாகுபடிக்கு இன்சூரன்ஸ் வழங்கப்பட்டது.

விவசாயிகளுக்கு நஷ்டஈடு

ஆனால் இரண்டரை ஆண்டு கால தி.மு.க அரசில் குறுவை சாகுபடிக்கு இன்சூரன்ஸ் மறுக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடியால் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு தி.மு.க. அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும். இல்லையென்றால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்றார்.

இதில் அமைப்பு செயலாளர் ஆசைமணி, மாவட்ட அவை தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஜெயபால் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் இளவரசன் நன்றி கூறினார்.


Next Story