அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு


அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x

எடப்பாடி, தாரமங்கலத்தில் நடந்த நகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சேலம்

சேலம்:

எடப்பாடி, தாரமங்கலத்தில் நடந்த நகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தாரமங்கலம்

தாரமங்கலம் நகராட்சியில் அவசர கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் மங்கையர்கரசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட தாரமங்கலம் நகராட்சியில் சொத்துவரி, காலிமனை வரியினங்களை உயர்த்த அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதனை நிறைவேற்றும் பொருட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பாலசுப்ரமணியம், சின்னுசாமி, ருக்மணி, தமிழ்செல்வி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து நகராட்சியில் நவீன எரிவாயு தகனமேடை ரூ.1 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எடப்பாடி

இதே போல எடப்பாடி நகராட்சியின் அவசர கூட்டம் நேற்று தலைவர் பாஷா தலைமையில் நடந்தது. இதில் துணைத்தலைவர் ராதா நாகராஜன், ஆணையாளர் சேகர், பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் முருகன், மேலாளர் (பொறுப்பு) சேரலாதன், வருவாய் ஆய்வாளர் (பொறுப்பு) குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் தங்கவேல், ரவி, கீதா பாஸ்கர், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நாராயணன், ராம்குமார், தனம், சக்தி, மல்லிகா உள்பட மொத்தம் 28 பேர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் சொத்து வரி உயர்வு குறித்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. அதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் நாராயணன் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து சொத்து வரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆத்தூர்

ஆத்தூர் நகராட்சி அவசர கூட்டம் தலைவர் நிர்மலா பபிதா தலைமையில் நடந்தது. இதற்கு துணைத்தலைவர் கவிதா ஸ்ரீராம், ஆணையாளர் பொன்னம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அரசு கொண்டு வந்துள்ள சொத்துவரி உயர்வு குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உமாசங்கரி, ராஜேஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் சொத்துவரி உயர்வு, காலிமனை வரி உயர்வு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.


Next Story