அ.தி.மு.க., பா.ம.க. ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க., பா.ம.க. ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
x

அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டெண்டர் பெட்டியை திறக்காததை கண்டித்து அ.தி.மு.க., பா.ம.க. ஒன்றிய கவுன்சிலர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டெண்டர் பெட்டியை திறக்காததை கண்டித்து அ.தி.மு.க., பா.ம.க. ஒன்றிய கவுன்சிலர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்காக கடந்த வாரம் டெண்டர் கோரப்பட்டது. இதில் ஒப்பந்ததாரர்கள் பலர் கலந்து கொண்டு பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பித்தனர். இந்தநிலையில் நேற்று டெண்டரில் கலந்து கொண்டு மனுக்கள் போடப்பட்ட பெட்டியை திறந்து மனுக்களை பரிசிலிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) விடுப்பில் இருப்பதால் டெண்டர் பெட்டி திறக்கவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே விடப்பட்ட டெண்டரில் குளறுபடி நடைபெற்றுள்ளதாகவும், இதுவரை விண்ணப்பம் போடப்பட்ட டெண்டர் பெட்டி திறக்கப்படாததை கண்டித்தும் அ.தி.மு.க., பா.ம.க. ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஒப்பந்ததாரர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயில் முன் அமர்ந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், மேலாளர் ஜெயவேல் ஆகியோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது விடுப்பில் இருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பதில் பொறுப்பேற்கும் அலுவலர், டெண்டர் பெட்டியை திறப்பதற்கு ஒரு நாள் முன்பே அனைவருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். அதுவரை டெண்டர் பெட்டியை பாதுகாப்பாக வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story