பொம்மனப்பாடி பால கட்டாயி அம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா


பொம்மனப்பாடி பால கட்டாயி அம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா
x

பொம்மனப்பாடி பால கட்டாயி அம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பொம்மனப்பாடி கிராமத்தில் உள்ள பால கட்டாயி அம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 3-ந்தேதி நள்ளிரவில் ஏரிக்கரையில் இருந்து அம்மன் குடி அழைத்தல் தீப்பந்தம் ஏந்தி வாண வேடிக்கையுடன் நடைபெற்றது. நேற்று முன்தினம் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் கோவிலில் இருந்து உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகளின் வழியாக மேளம், தாளம் முழங்க, வாண வேடிக்கைகளுடன் ஊர்வலமாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தார். அப்போது கோவிலில் பால கட்டாயி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அம்மனுக்கு காய்ச்சப்பட்ட கூழ் படையலிட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. நேற்று இரவு அருள் வந்து கத்தி மேல் நின்று ஆடிய மருளாளி பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். பின்னர் மஞ்சள் நீராட்டுடன் குடி விடுதலுடன் திருவிழா நிறைவு பெற்றது. நேற்று அந்தப்பகுதியில் மழை பெய்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


Next Story