ஆதிதிராவிடர், பழங்குடியினர் சென்னை ஐ.ஐ.டி.யில் சேர விண்ணப்பிக்கலாம்


ஆதிதிராவிடர், பழங்குடியினர் சென்னை ஐ.ஐ.டி.யில் சேர விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 26 Aug 2023 6:45 PM GMT (Updated: 26 Aug 2023 6:46 PM GMT)

ஆதிதிராவிடர், பழங்குடியினர்சென்னை ஐ.ஐ.டி.யில் சேர விண்ணப்பிக்கலாம்.

ராமநாதபுரம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் தாட்கோ சார்பில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி. மூலம் தொழில் பாதை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யில் முதல் முறையாக டேட்டா சயின்ஸ் மற்றும் மின்னணு அமைப்புகள் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் 12-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்த மாணவர்கள் விண்ணப்பித்து 4 ஆண்டு பட்டப்படிப்பு படிக்கலாம். விண்ணப்பங்களை www.tahdco.com என்ற இணையதளத்தில் அனுப்ப வேண்டும்.

மாணவர்களுக்கு தாட்கோ மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். சென்னை ஐ.ஐ.டி. நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 4 வார பயிற்சி அளிக்கப்படும். இதில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் படிப்பில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். படிப்பிற்கான செலவுகளை தாட்கோ நிறுவனம் வழங்கும். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story