வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்த பணிகள்-இன்று தொடங்குகிறது


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்த பணிகள்-இன்று தொடங்குகிறது
x

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்த பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

அரியலூர்

வாக்காளர் பட்டியல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் வருகிற 5.1.2024 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதனால் 1.1.2024-ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு பல்வேறு முன்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 21-ந்தேதி வரை வாக்காளர் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல், முகவரி மாற்றம், வாக்குச்சாவடி பிரித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களது வீடு தேடி வர உள்ளனர்.

ஒத்துழைப்பு

எனவே அரியலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தினை சிறப்பாகவும், விரைவாகவும், 100 சதவீதம் தூய்மையாகவும், துரிதமாகவும் இப்பணியினை முடித்திடும் பொருட்டு பொதுமக்கள் வீட்டிற்கு கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story