அனுமதியின்றி இணைப்பு கொடுத்துள்ள குடிநீர், பாதாள சாக்கடைகளுக்கு உரிய தொகை செலுத்தி பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை மாநகராட்சி மேயர் எச்சரிக்கை


அனுமதியின்றி இணைப்பு கொடுத்துள்ள குடிநீர், பாதாள சாக்கடைகளுக்கு உரிய தொகை செலுத்தி பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை  மாநகராட்சி மேயர் எச்சரிக்கை
x

அனுமதியின்றி இணைப்பு கொடுத்துள்ள குடிநீர், பாதாள சாக்கடைகளுக்கு உரிய தொகை செலுத்தி பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர்

கடலூர் மாநகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதியில் அனுமதியின்றி குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு வைத்துள்ளவர்கள் மாநகராட்சியில் உரிய தொகை செலுத்தி, அந்த இணைப்புகளை 15.8.2022-க்குள் பதிவு செய்து முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். உரிய தொகை செலுத்தி முறைப்படுத்திக் கொள்ளாதபட்சத்தில் மாநகராட்சி மூலம் அனுமதியற்ற குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள் கண்டறியப்பட்டால் அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் இணைப்புகளும் மாநகராட்சி மூலம் துண்டிப்பு செய்யப்படும். இதுதவிர சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை மூலம் சட்டப்படி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

மேற்கண்ட தகவல் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story