திருமங்கலத்தில் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை -ரெயில்வே மந்திரிக்கு, மாணிக்கம்தாகூர் எம்.பி. கடிதம்


திருமங்கலத்தில் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை -ரெயில்வே மந்திரிக்கு, மாணிக்கம்தாகூர் எம்.பி. கடிதம்
x

திருமங்கலத்தில் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க ரெயில்வே மந்திரிக்கு, மாணிக்கம்தாகூர் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்

மதுரை

திருமங்கலம்,

மாணிக்கம் தாகூர் எம்.பி. ரெயில்வே மந்திரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மதுரையை அடுத்த திருமங்கலம் தென் தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய நகரமாகும். இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதிகளில் ஏராளமான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பயணிக்கும் வகையில் சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ், திருச்சி- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருமங்கலம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். சென்னை சென்ட்ரல் ெரயில் நிலையத்திலிருந்து வடக்கு நோக்கி செல்லும் இரவு நேர ரெயில்களை பிடிக்க குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பெரிதும் பொருத்தமான இணைப்பு ரெயிலாக இருக்கும். திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் சென்றாலும் திருமங்கலத்தில் நின்று சென்றால் அனைத்து மக்களுக்கும் பயன் அளிக்கும். குருவாயூர் எக்ஸ்பிரஸ் குளித்தலை, இரணியல், வள்ளியூர், நாங்குநேரி, சாத்தூர், சோழவந்தான், மணப்பாறை ஆகிய ஊர்களில் நின்று செல்கின்றன. இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் குளித்தலை, வள்ளியூர், சாத்தூர், மணப்பாறை ஆகிய ஊர்களில் நின்று செல்கிறது. மேலே குறிப்பிட்ட ஊர்களுடன் ஒப்பிடும்போது திருமங்கலம் வேகமாக வளர்ந்து வரும் பெரிய நகரமாகும். எனவே பொதுமக்களின் பயன் கருதியும், திருமங்கலம் ரெயில் நிலைய வருமானம் உயரும் வகையிலும், சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ், திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்களை திருமங்கலத்தில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story