கோபி அருகே பள்ளிக்கூட வேன் வயலில் கவிழ்ந்தது- 2 மாணவிகள்-டிரைவர் உயிர் தப்பினர்


கோபி அருகே பள்ளிக்கூட வேன் வயலில் கவிழ்ந்தது- 2 மாணவிகள்-டிரைவர் உயிர் தப்பினர்
x

கோபி அருகே பள்ளிக்கூட வேன் வயலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 மாணவிகள்- டிரைவர் உயிர் தப்பினார்கள்.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே பள்ளிக்கூட வேன் வயலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 மாணவிகள்- டிரைவர் உயிர் தப்பினார்கள்.

பள்ளி வேன் கவிழ்ந்தது

சத்தியமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியின் வேன் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக நேற்று காலை சென்று கொண்டு இருந்தது. கூடக்கரை என்ற இடத்தில் ஒரு மாணவியையும், மோடர்பாளையம் கிராமத்தில் ஒரு மாணவியையும் ஏற்றிக்கொண்டு பள்ளிைய நோக்கி சென்றது.

உக்கரம் என்ற இடம் அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார்சைக்கிளுக்கு வழி விடுதற்காக டிரைவர் சண்முகம் வேனை சாலை ஓரத்துக்கு கொண்டு சென்றார். அப்போது சாலையில் இருந்த குழியில் சக்கரம் இறங்கியது. மேலும் அதிகாலை அந்த பகுதியில் பெய்த சாரல் மழை காரணமாக வேனின் சக்கரம் வழுக்கி ரோட்டோர வயலில் கவிழ்ந்தது.

உயிர் தப்பினார்கள்...

வேன் கவிழ்ந்தபோது உள்ளுக்குள் இருந்த 2 மாணவிகளும் அய்யோ அம்மா என்று அலறி துடித்தார்கள். ஆனால் நல்ல வேளையாக அவர்கள் இருவரும் இந்த விபத்தில் காயமின்றி உயிர் தப்பினார்கள். டிரைவர் சண்முகத்துக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மாணவிகளையும், சண்முகத்தையும் ரோட்டுக்கு அழைத்து வந்தார்கள்.

இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story