வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ் ஏட்டு படுகாயம்; 3 வாலிபர்கள் கைது


வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ் ஏட்டு படுகாயம்; 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 23 Aug 2022 9:44 PM GMT (Updated: 23 Aug 2022 9:46 PM GMT)

வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ் ஏட்டு படுகாயம்; 3 வாலிபர்கள் கைது

ஈரோடு

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிரோட்டில் மாவட்ட எல்லை பகுதியில் போலீஸ் துறை சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு சுழற்சி முறையில் பணியில் ஈடுபடும் போலீசார் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஈரோட்டுக்கு வரும் வாகனங்களை சோதனை செய்வது வழக்கம்.

இந்தநிலையில் கருங்கல்பாளையம் போலீஸ் ஏட்டு அற்புதராஜ் (48) மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்கள். அப்போது பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து கொண்டிருந்தனர். அந்த மோட்டார் சைக்கிள் சோதனை சாவடி அருகில் வந்தபோது போலீஸ் ஏட்டு அற்புதராஜ் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்த அற்புதராஜை அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சக போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தியதாக ஈரோடு கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் வீதியை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளியான முத்துக்குமார் (46), கிருஷ்ணம்பாளையம் ரோட்டை சேர்ந்த அருணாசலத்தின் மகன் சீனிவாசன் (28), அவரது தம்பி முரளிதரன் (27) ஆகியோரை கைது செய்தனர்.


Next Story