கம்பம் ஒன்றியத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கியதில் முறைகேடு


கம்பம் ஒன்றியத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கியதில் முறைகேடு
x

கம்பம் ஒன்றியத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.

தேனி

கம்பம்:

கம்பம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் விலையில்லா ஆடுகள் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி தலைவர் மொக்கப்பன் தலைமையில் ஊராட்சி தலைவர்கள், தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கம்பம் ஒன்றியத்தில் கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, ஆங்கூர்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தின்கீழ் ஒருவருக்கு தலா 5 ஆடுகள் வீதம் வழங்கப்பட்டது. ஆனால் இதில் தகுதியான பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்படவில்லை.

மேலும் தகுதியற்றவர்களுக்கு ஆடுகளை வழங்கி புகைப்படம் மட்டும் எடுத்தனர். பின்னர் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆடுகளை திரும்ப வியாபாரிகளிடம் வழங்கினர். இதுபோன்று பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. எனவே கம்பம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆடுகள் பெற்ற பயனாளிகளிடம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story