ஆடி அமாவாசை: கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆடி அமாவாசை: கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 16 Aug 2023 6:45 PM GMT (Updated: 16 Aug 2023 6:46 PM GMT)

ஆடி அமாவாசை: கோவில்களில் சிறப்பு வழிபாடு

சிவகங்கை

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டாரத்தில் உள்ள கோவில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சிங்கம்புணரி என்பீல்டு மேல்மலை குன்று என்று அழைக்கப்படும் மண்மலையில் அமைந்துள்ள தவ யோகேஸ்வரர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றன. அருணகிரி சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு வேள்வி நடைபெற்று கோவில் மூலவர் தவ யோகேஸ்வரர் மற்றும் பிரித்திங்கரா தேவி, பஞ்சமுகநாயகி மற்றும் 21 சித்தர்கள், அஷ்ட லட்சுமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதைதொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் சித்தருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சித்தர் அருள்பாலித்தார். எஸ்.வி. மங்கலத்தில் உள்ள கூந்தலுடைய அய்யனார் கோவிலில் பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று கோர்க்கப்பட்ட வளையல்களை கொண்டு மாலையாக அணிவித்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


Next Story