திண்டிவனம் அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது


திண்டிவனம் அருகே    சாராயம் விற்ற வாலிபர் கைது
x

திண்டிவனம் அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

திண்டிவனம்,

ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் திண்டிவனம் அடுத்த ஆட்சிப்பாக்கம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள குளக்கரை அருகில் ஒருவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பிரம்மதேசம் கீழ்மண்னூர் கிராமத்தை சேர்ந்த வீரராகவன் மகன் ராஜி (வயது 31) என்பதும், சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 150 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் ஆட்சிப்பாக்கம் சுடுகாடு பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்ட போது, அங்கு ஒருவர் ஸ்கூட்டரில் வைத்து சாராயம் விற்றுக் கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அவர் ஸ்கூட்டரை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து ஸ்கூட்டருடன் 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.


Next Story