திண்டுக்கல்லில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
திண்டுக்கல்லில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
திண்டுக்கல்
திண்டுக்கல் என்.எஸ்.நகர் ராஜகாளியம்மன் நகரை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் தினேஷ் (வயது 19). இவர் ஆந்திராவில் தங்கி பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். கடந்த ஆண்டு அவர் திண்டுக்கல்லுக்கு வந்தார். ஆனால் அவருக்கு தமிழில் சரளமாக பேச முடியவில்லை.
இதனால் தினேஷ், நண்பர்களிடம் பழக முடியவில்லையே என்று மனவருத்தத்தில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தினேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவரின் தற்கொலைக்கான காரணம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story