நின்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
ஓட்டப்பிடாரம் அருகே நின்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியானார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே கக்கரம்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 60). கூலி தொழிலாளி. இவருக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும், மூன்று பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு குறுக்குசாலையில் இருந்து கக்கரம்பட்டி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். கக்கரம்பட்டி விலக்கு அருகே சென்றபோது அங்கு டீசல் இல்லாமல் நின்ற டிராக்டரின் பின்புறமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் வேலுச்சாமி தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். வேலுச்சாமி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.