கள்ளச்சாராயத்தை ஒழித்த கிராம நிர்வாக அலுவலரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது


கள்ளச்சாராயத்தை ஒழித்த கிராம நிர்வாக அலுவலரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது
x
தினத்தந்தி 29 May 2023 6:45 PM GMT (Updated: 29 May 2023 6:46 PM GMT)

கள்ளச்சாராயத்தை ஒழித்த கிராம நிர்வாக அலுவலரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது எனறு கலெக்டரிடம், 2 கிராம மக்கள் மனு கொடுத்தனா்.

கடலூர்

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காராமணிக்குப்பம் மற்றும் வரக்கால்பட்டு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அருண் தம்புராஜிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

வரக்கால்பட்டு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் பாலமுருகன், வரக்கால்பட்டு மற்றும் காராமணிக்குப்பம் பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நத்தம் புறம்போக்கில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட பரிந்துரை செய்துள்ளார். மேலும் எங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக நடந்த கள்ளச்சாராயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், போலீசில் புகார் அளித்தும் முற்றிலுமாக கள்ளச்சாராயம் விற்பனையை ஒழித்துள்ளார். கிராம மக்களுக்காக அவர் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார். இதற்கிடையே அவர் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதனால் அவரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது. எங்கள் கிராமத்தில் 3 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிந்துள்ளதால், தொடர்ந்து இன்னும் 2 ஆண்டுகள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். மேலும் விடுபட்டுள்ள அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story