போரில் வீர மரணமடைந்த வீரருக்கு மரியாதை


போரில் வீர மரணமடைந்த வீரருக்கு மரியாதை
x

போரில் வீர மரணமடைந்த வீரருக்கு ராஜபாளையத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையத்தை சேர்ந்தவர் அழகர் அர்ஜூனன். இவர் ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது கடந்த 1965-ம் ஆண்டு, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரில் மரணமடைந்தார். அப்போது இவரது உடலை அடக்கம் செய்த இந்திய ராணுவம், அவர் அணிந்திருந்த உடையை மட்டும் குடும்பத்தினருக்கு அனுப்பி உள்ளனர். தற்போது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக, போரில் உயிர் நீத்த மூத்த வீரர்களுக்கு இறுதி மரியாதை மத்திய அரசு சார்பில் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அழகர் அர்ஜூனனுக்கு நெல்லையில் செயல்படும் 5-வது தமிழ்நாடு தேசிய மாணவர் படையை சேர்ந்த கர்னல் போபி ஜோசப் தலைமையில், சுபேதார், நைப் சுபேதார், ஹவில்தார் உள்ளிட்ட அதிகாரிகளும், வருவாய் துறையினர் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்களும் அவரது உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்தும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர். இதில் நகரசபை தலைவர் பவித்ரா ஷ்யாம், தன்னார்வலர்கள், வருவாய் துறையினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அழகர் அர்ஜூனன் நினைவாக அவரது குடும்பத்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.



Next Story