வெண்டைக்காய் விலை திடீர் உயர்வு


வெண்டைக்காய் விலை திடீர் உயர்வு
x

தேவூர் பகுதியில் வெண்டைக்காய் விலை திடீரென உயர்ந்தது. ஒரே நாளில் ரூ.10 அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சேலம்

தேவூர்:-

தேவூர் பகுதியில் வெண்டைக்காய் விலை திடீரென உயர்ந்தது. ஒரே நாளில் ரூ.10 அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வெண்டைக்காய் சாகுபடி

சேலம் மாவட்டம் தேவூர், மூலப்பாதை, வெள்ளாளபாளையம், சுண்ணாம்புக்கரட்டூர், ஒக்கிலிப்பட்டி, கோணக்கழத்தானூர், பூமணியூர், குள்ளம்பட்டி, குஞ்சாம்பாளையம், சென்றாயனூர், புள்ளாக்கவுண்டம்பட்டி, செட்டிபட்டி, மோட்டூர், தண்ணித்தாசனூர், கல்வடங்கம், காவேரிபட்டி, அம்மாபாளையம், மயிலம்பட்டி, வட்ராம்பாளையம், ஒடசக்கரை, சோளக்கவுண்டனூர், கோனேரிபட்டி, பொன்னம்பாளையம், மேட்டுப்பாளையம், கொட்டாயூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் வெண்டைக்காய் பயிரிட்டுள்ளனர்.

அவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட வெண்டைக்காய்களை வியாபாரிகள் கொள்முதல் செய்து கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு தரம் பிரிக்கப்பட்டு கொச்சி, திருவனந்தபுரம், விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து துபாய்க்கு அனுப்பி வைக்கின்றனர்.

ஒரே நாளில் உயர்வு

தமிழகத்தில் இந்த ஆண்டு வெண்டைக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. தேவூர் பகுதியில் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கடந்த ஒரு மாதங்களாக வெண்டைக்காய்களை ஒரு கிலோ ரூ.4-க்கும் குறைவாக வாங்கி சென்றனர்.இந்தநிலையில் நேற்்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிலோ ரூ.14-க்கு வியாபாரிகள் வாங்கி சென்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story