பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை


பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை
x

நாங்குநேரி யூனியன் அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமப்பகுதியில் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று நாங்குநேரி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் யூனியன் ஆணையாளர் சங்கரகுமார், தெற்கு நாங்குநேரி பஞ்சாயத்து தலைவர் சகுந்தலா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story