மீன்வலையில் சிக்கிய மலைப்பாம்பு


மீன்வலையில் சிக்கிய மலைப்பாம்பு
x

நெல்லை அருகே மீன்வலையில் மலைப்பாம்பு சிக்கியது.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள மணப்படை வீடு பகுதியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவர் நேற்று தாமிரபரணி ஆற்றில் மீன்பிடிக்க வலையை விரித்தார். அப்போது, அதில் சுமார் 7 அடி நீளமுடைய மலைப்பாம்பு சிக்கியது.

இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று வலையில் சிக்கியிருந்த மலைப்பாம்பை மீட்டனர். பின்னர் அதை காட்டுப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.


Next Story