சேலத்தில்கண்தானம் விழிப்புணர்வு குறித்து ஊர்வலம்


சேலத்தில்கண்தானம் விழிப்புணர்வு குறித்து ஊர்வலம்
x
தினத்தந்தி 5 Sep 2022 8:00 PM GMT (Updated: 5 Sep 2022 8:00 PM GMT)

சேலத்தில் கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

சேலம்

தேசிய கண்தானம் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. கண்தானம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேலத்தில் டாக்டர் அகர்வால் கண் ஆஸ்பத்திரி சார்பில் வாக்கத்தான் ஊர்வலம் நடைபெற்றது.

போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, டாக்டர். அகர்வால் கண் ஆஸ்பத்திரி பிராந்திய மருத்துவ இயக்குனர் டாக்டர் கற்பகவள்ளி ஆகியோர் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் ஜெயராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள், டாக்டர் அகர்வால் கண் ஆஸ்பத்திரி டாக்டர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி பேசும் போது, 'இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பார்வைத்திறனின்மை என்பது முக்கியமான பொது சுகாதார பிரச்சினைகளுள் ஒன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டில் கண்தானம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கவும், அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்கிறது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் தங்களது கணகளை தானம் செய்வதற்கு உறுதிமொழி வழங்க முன்வர வேண்டும். இதன் காரணமாக மாநிலத்தில் 100 சதவீதம் கண் தானமளிப்பவர்கள் உள்ள மாவட்டமாக சேலம் மாவட்டத்தை அறிவிக்க இயலும்' என்றார்.


Next Story