30 விநாயகர் சிலைகள் ஊர்வலம்


30 விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x

30 விநாயகர் சிலைகள் ஊர்வலம்

திருவாரூர்

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தற்போது விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள ஆறுகள், நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது. திருவாரூர் நகரில் 30 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினசரி வழிபாடு நடந்தது. நேற்று மாலை திருவாரூர் நகரில் வைக்கப்பட்டிருந்த 30 விநாயகர் சிலைகள் கடைவீதியில் உள்ள ஊமை காளியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்டது. இதில் வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், பா.ஜனதா கட்சி மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட செயலாளர் ரவி, வணிகர் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, இந்து முன்னணி நகர தலைவர் செந்தில்குமார், மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட அமைப்பாளர் விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலம் பழைய பஸ்நிலையம், பனகல் சாலை, தெற்குவீதி, கமலாலயம், வடக்குவீதி, கீழவீதி, நேதாஜி ரோடு வழியாக சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வந்து ஓடம்போக்கி ஆற்றின் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story