24 விநாயகர் சிலைகள் ஊர்வலம்


24 விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x

திருத்துறைப்பூண்டியில் 24 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு முள்ளியாற்றில் கரைக்கப்பட்டன

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில் 24 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு முள்ளியாற்றில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய. நகர இந்து முன்னணி சார்பில் திருத்துறைப்பூண்டியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடைபெறவில்லை.

இந்த ஆண்டு போலீசார் அனுமதி வழங்கியதால் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. முன்னதாக திருத்துறைப்பூண்டி, கொக்கலாடி, பாமணி, நெடும்பலம், அண்ணாநகர், மண்ணைசாலை, மடப்புரம், வேலூர், வேதைசாலை, சங்கிலிவீரன்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 24 விநாயகர் சிலைகள் திருத்துறைப்பூண்டி பிரவிமருதீஸ்வரர் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது.

முள்ளியாற்றில் கரைப்பு

இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. முன்னாள் மாநில மருத்துவர் அணி தலைவர் டாக்டர் பாசுமணி தலைமை தாங்கினார். திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. மேலிட பார்வையாளர் பேட்டைசிவா, மாநில செயற்குழு உறுப்பினர் ராகவன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் ரமேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். . இதில் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் வினோத், நகர தலைவர் ஐயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரவி மருந்தீஸ்வரர் கோவிலில் இருந்து தொடங்கி ஊர்வலம் அண்ணாசிலை, கீழேவீதி, மேலவீதி, வடக்குவீதி, நாகை சாலை, காமராஜர்தெரு, வேதை சாலை, ஜவுளிக்கடை தெரு, காசுகடைதெரு, பழைய பஸ் நிலையம், ரெயில்வே சாலை வழியாக சென்று ெரயில்வே கேட் அருகில் வந்தடைந்து முள்ளிஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.

பாதுகாப்பு பணி

ஊர்வலத்துக்கு திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் பழனியப்பன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story