சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்ற சுமார் 20 ஆயிரம் தூய்மை பணியாளர்களை ஈடுபடுத்த திட்டம்
சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்றுவதற்கு மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை,
சென்னையில் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்றுவதற்கு மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்றுவதற்காக, சுமார் 20 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் பட்டாசு கழிவுகளை சேகரிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பட்டாசு கழிவுகளை கொண்டு செல்வதற்கு ஏதுவாக, மண்டலத்துக்கு 2 வாகனங்கள் என 30 வாகனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story