அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத்தொகை ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்


அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத்தொகை ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்
x

அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத்தொகை ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை

அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத்தொகை ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தஞ்சை தெற்கு மாவட்ட பூசாரிகள் பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பேரவை கூட்டம்

தஞ்சை தெற்கு மாவட்ட பூசாரிகள் பேரவை கூட்டம் பட்டுக்கோட்டை ஆதிகைலாசநாதர் கோவிலில் மாவட்ட தலைவர் சின்னப்பா தலைமையில் நடந்தது. தஞ்சை தெற்கு மாவட்ட அருள்வாக்கு பேரவை அமைப்பாளர் பரமசிவம், இணை அமைப்பாளர் மாணிக்கம், பூசாரிகள் பேரவை இணை அமைப்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயபால் இறைவணக்கம் பாடினார்.

ஆதிகைலாசநாதர் ஆலய மேலாண்மை அறங்காவலர் விவேகானந்தன், சைவ சித்தாந்த பேரவை முன்னாள் அமைப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.

ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கிராமக் கோவில் பூசாரிகள் பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட மாநாட்டை அடுத்த மாதம்(செப்டம்பர்) 17-ந் தேதி பட்டுக்கோட்டையில் நடத்துவது. கிராமக்கோவில் பூசாரிகள் நல வாரியத்தில் அனைத்து பூசாரிகளையும் இணைத்து அடையாள அட்டை வழங்க வேண்டும்.

அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத்தொகை ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். 60 வயது நிறைவடைந்த அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். சிதிலமடைந்த கிராமக் கோவில்களை புனரமைத்து குடமுழுக்கு நடத்த நிதி உதவி வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக செல்லக்கண்ணு நன்றி கூறினார்.


Next Story