குப்பை தொட்டியில் கிடந்த துப்பாக்கி


குப்பை தொட்டியில் கிடந்த துப்பாக்கி
x

மதுரை மத்திய சிறை அருகே குப்பைத்தொட்டியில் கிடந்த துப்பாக்கி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை மத்திய சிறை அருகே குப்பைத்தொட்டியில் கிடந்த துப்பாக்கி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குப்பை தொட்டியில் துப்பாக்கி

மதுரை மத்திய சிறையில், விசாரணை கைதி, தண்டனை கைதி என 1,500-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் பெண் கைதிகளுக்கான சிறை தனியாக உள்ளது.

கைதிகளை சந்திக்க சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து ஏனைய நாட்களில் காலை முதல் மதியம் வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அந்த நாட்களில் பார்வையாளர்கள் அதிகாலையில் இருந்தே சிறைவாசலில் காத்து இருப்பார்கள்.

சிறைக்கு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இருவர், குப்பை தொட்டியை சுத்தம் செய்ய வந்தனர். அப்போது, கைத்துப்பாக்கியுடன் ஒரு பை குப்பை தொட்டியில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த துப்பாக்கியை, சிறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கைதிக்கு கொடுக்க வைத்திருந்ததா?

உடனே போலீசார் அந்த துப்பாக்கியை சிறை கண்காணிப்பாளர் வசந்தகண்ணனிடம் வழங்கினர். இதுகுறித்து அவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். மேலும் அவர், அந்த துப்பாக்கியை கரிமேடு போலீசாரிடம் ஒப்படைத்து, நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

குப்பைத்தொட்டியில் கிடந்த துப்பாக்கி, ஏர்கன் ரக துப்பாக்கியை சேர்ந்தது என தெரியவந்துள்ளது. சிறைச்சாலையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ள நிலையில் அங்குள்ள குப்பைத்தொட்டியில் இந்த துப்பாக்கி எவ்வாறு வந்தது? அதனை கைதிகளின் உறவினர்கள் கொண்டு வந்தார்களா அல்லது கைதிக்கு கொடுப்பதற்காக அங்கு வைக்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணைைய துரிதப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து கைதிகள் சிலரிடமும் போலீசார் விசாரிக்க உள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story