ஆண்டிப்பட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
ஆண்டிப்பட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
தேனி
ஆண்டிப்பட்டி அருகே உள்ள பந்துவார்பட்டியை சேர்ந்தவர் வீரபுத்திரன் (வயது 70). விவசாயி. இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால் வீரபுத்திரன், தனது மனைவியுடன் அப்பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் வீரபுத்திரன் கடந்த சில வாரங்களாக தீராத வயிற்று வலியால் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் விஷத்தை குடித்தார். இதில், மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வீரபுத்திரன் இறந்தார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story