கூத்தாநல்லூர் பகுதியில் வேகமாக பரவும் காய்ச்சல்


கூத்தாநல்லூர் பகுதியில் வேகமாக பரவும் காய்ச்சல்
x

கூத்தாநல்லூர் பகுதியில் வேகமாக பரவும் காய்ச்சல்

திருவாரூர்

கூத்தாநல்லூர் பகுதியில் வேகமாக பரவும் காய்ச்சலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து சுகாதாரத்துறையினர் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேகமாக பரவும் காய்ச்சல்

கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பலர் திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

இவ்வாறு திடீர் காய்ச்சல் ஏற்பட்டவர்கள் வெயிலின் தாக்கம் காரணமாக பருவநிலை மாறி குளிக்கும் தண்ணீர் மற்றும் குடிதண்ணீர் மூலமாக இந்த திடீர் காய்ச்சல் ஏற்படுவதாக தெரிவித்தனர். இதனிடையே இந்த திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

பருவநிலை மாற்றம்

இந்த திடீர் காய்ச்சல் ஒருவரது உடம்பில் 3 அல்லது 5 மணி நேரம் வரை நீடித்து வருவதாகவும், இதனால் உடல்நலம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் தெரிவித்தனர். இந்த காய்ச்சல் நோய் பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். இதேபோல் திடீர் காய்ச்சல் ஏற்பட்ட பலர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உரிய சிகிச்்சை அளிக்க நடவடிக்கை

எனவே வேகமாக பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் நடமாடும் மருத்துவ முகாம் அமைத்து தடுப்பூசி மற்றும் உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளன


Next Story