கம்பம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு சாவு


கம்பம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு சாவு
x

கம்பம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு இறந்தது

தேனி

கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கருமாரிபுரத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 55) விவசாயி. இவர் 4 பசுக்களை வளர்த்து வந்தார். இன்று அவர், அந்த பசுக்களை அங்குள்ள சின்ன வாய்க்கால் பகுதியில் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார். 4 பசுக்களும் ஒரே இடத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. அதில் ஒரு பசு அப்பகுதியில் உள்ள கிணற்றின் அருகே தண்ணீர் குடிப்பதற்காக சென்றது. அப்போது கிணற்றை ஒட்டியிருந்த இரும்புக் குழாயில் கால் தவறி பசு கிணற்றில் விழுந்தது. இதுகுறித்து கம்பம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 300 அடி ஆழ கிணற்றில் கயிறு கட்டி இறங்கினர். கிணற்றில் போதிய தண்ணீர் இல்லாததால் பசு காயமடைந்து இறந்து போனது. பின்னர் இறந்த பசுவின் உடலை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story