70,950 மாணவ-மாணவிகள் பொதுத்ேதர்வை எழுதுகின்றனர்


70,950 மாணவ-மாணவிகள் பொதுத்ேதர்வை எழுதுகின்றனர்
x

விருதுநகர் மாவட்டத்தில் பொதுத்தேர்வினை 70,950 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டத்தில் பொதுத்தேர்வினை 70,950 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

பொதுத்தேர்வு

மாவட்டத்தில் 245 உயர்நிலைப்பள்ளிகள் 152 மேல்நிலைப்பள்ளிகள் உள்பட மொத்தம் 1,722 பள்ளிகள் உள்ளன. இந்நிலையில் இப்பள்ளிகளில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 529 மாணவர்களும், 1 லட்சத்து 60 ஆயிரத்து 519 மாணவிகளும் என மொத்தம் 3 லட்சத்து 24 ஆயிரத்து 048 பேர் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் வருகிற 13-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வும், 14-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வும், ஏப்ரல் 4-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வும் தொடங்குகின்றன. மாவட்டத்தில் நடப்பாண்டில் 10,985 மாணவர்களும் 12,383 மாணவிகளும் ஆக மொத்தம் 23,368 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

கண்காணிப்பு குழுக்கள்

10,240 மாணவர்களும், 11,796 மாணவிகளும் ஆக மொத்தம் 22,036 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வுஎழுதுகின்றனர்.

12,755 மாணவர்களும், 12,791 மாணவர்களும் ஆக மொத்தம் 25,546 பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு எழுதுகின்றனர். ஆக மொத்தம் பொது தேர்வினை 70,950 மாணவ-மாணவிகள் பொதுத் தேர்வுகள் எழுதுகின்றனர். இந்த தேர்வுகளை கண்காணிக்க மாநில அளவில் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட 38 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்ட வாரியாக தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னேற்பாடு பணிகள்

விருதுநகா் மாவட்டத்தை பொருத்தமட்டில் 25-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படுமென்றும், பொதுத்தேர்வுகளுக்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story