4 பேருக்கு 7 ஆண்டு சிறை


4 பேருக்கு 7 ஆண்டு சிறை
x

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊர் கூட்டத்தில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊர் கூட்டத்தில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஊர் கூட்டத்தில் தாக்குதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாரி (வயது 48). தொழிலாளியான இவரை முன் விரோத காரணமாக ஊர் கூட்டத்தில் வைத்து அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (24), பாண்டி (25), லிங்கம் (22), வனராஜா (19) ஆகிய 4 பேரும் சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் ஏற்கனவே உடல் நல குறைவால் இருந்த மாரி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

7 ஆண்டு சிறை

இந்த வழக்கை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ப்ரித்தா விசாரித்து மாரியை சரமாரியாக தாக்கி கொலை செய்த ராஜ்குமார் உள்பட 4 பேருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனையும், பாண்டிக்கு ரூ.11 ஆயிரம் அபராதமும் மற்றவர்களுக்கு ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். லிங்கம், வனராஜா ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story