வனத்துறை மூலம் நடப்பாண்டில் 7½ லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு


வனத்துறை மூலம் நடப்பாண்டில் 7½ லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு
x

வனத்துறை மூலம் நடப்பாண்டில் 7½ லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

தமிழ்நாடு வனத்துறை, திருச்சி வன மண்டலம், அரியலூர் வன கோட்டம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. இதில் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். அப்போது அவர் கூறுகையில், அரியலூர் மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் 2023-24-ம் ஆண்டிற்கு 7 லட்சத்து 57 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அரியலூர் வனக்கோட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவைப்படும் மரக்கன்றுகள் இலவசமாக வினியோகம் செய்யப்படவுள்ளது. இதே போன்று அரியலூர் மாவட்டத்தில் 25 எண்ணிக்கை தனியார் நாற்றங்கால்களில் 4 லட்சத்து 50 ஆயிரம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இதனை முறையாக பயன்படுத்தி அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து பசுமை மாவட்டமாக மாற்ற முன்வர வேண்டும், என்றார். இதில் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துக்கிருஷ்ணன், வனத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story