சேர்வராயன் கோவிலில் 51 கிடாவெட்டி மீனவர்கள் பூஜை


சேர்வராயன் கோவிலில் 51 கிடாவெட்டி மீனவர்கள் பூஜை
x

சேர்வராயன் கோவிலில் 51 கிடாவெட்டி மீனவர்கள் பூஜை

நாகப்பட்டினம்

வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மீனவ கிராமத்தில் 60 விசைபடகுகளும், 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் தினமும் காலை, மாலை வேளைகளில் வங்களாவிரிகுடா, பாக்ஜலசந்தியில் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். வங்களாவிரிகுடாவும், பாக்ஜலசந்தியும் சந்திக்கும் இடமான கோடியக்காடு பகுதியில் சேர்வராயன் கோவில் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு தினமும் மீன்பிடிக்க செல்லும்போது மீனவர்கள் மீன்வளம் வேண்டி சேர்வராயனை வணங்கி செல்வது வழக்கம். மீனவர்கள் தங்களது காவல் தெய்வமாக வழிபட்டு வரும் சேர்வராயன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மீன்வளம் வேண்டி கிடா வெட்டி பூஜை செய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆறுகாட்டுத்துறையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கோடியக்காட்டில் அமைந்துள்ள சேர்வராயன் கோவிலுக்கு சென்று 51 கிடாவெட்டி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பின்பு சேர்வராயனுக்கு கறி சமைத்து படையல் வைத்து வழிபட்டனர். பின்பு அனைவருக்கும் கறிவிருந்து அளிக்கப்பட்டது.


Related Tags :
Next Story